இணையத்தில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதில், ஒரு பெண் தனது தந்தையின் கடையில் அமர்ந்து, குழந்தைப் பருவத்தில் கனவில் நினைத்ததைப் போலவே சுவையான சிப்ஸ்கள், பிஸ்கட்கள், குளிர்பானங்கள் என எல்லாவற்றையும் சுவைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். “20 லட்சம் முதலீடு, 36 லட்சம் இழப்பு!” என்ற பழமொழிக்கு பொருள் கிடைத்த மாதிரி இந்த வீடியோவில் அவர் சாப்பிடும் ஹாப்பினஸ் நெட்டிசன்களை சிரிக்கவைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Arpita Balodi (@arpita_balodi)

“>

இந்த வீடியோவை @arpita_balodi என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ளார். “என் குழந்தைப் பருவ கனவு” என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோ தற்போது 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அப்பா இந்த வீடியோவை பார்த்தா, இனிமே கடையில் உக்கார சொல்வதில்லை,” “நம்ம கனவுகள் அவங்க நஷ்டமா இருக்கு,” “சாப்பிடும் வேகத்துக்கு கடையையே முடிச்சுடுவாங்க!” என கலாய்க்கின்றனர். நம்மில் பலருக்கும் இருந்திருக்கும் அந்தக் கனவுகள் இப்போது இந்த தேவதையின் வாயிலாக நிஜமாவும்… வைரலாவும் மாறிவிட்டது!