பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ட்விட்டர் பதிவை பார்த்த ஸ்விகி நிறுவனம் சாப்பாட்டுடன் ஒரு படையையே அவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ரசிகர் ஒருவர் சாப்பிட்டாச்சா பாய் என கேட்டுள்ளார். இதற்கு சாருக்கான், ஏன் பாய் நீங்கள் ஸ்விக்கியில் வேலை செய்கிறீர்களா? எனக் கேட்டுள்ளார். இதனைப் பார்த்த ஸ்விக்கியின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து சாப்பாடு வேண்டுமா என கேட்டுள்ளனர். மேலும் ஸ்விக்கி நிறுவனம் ஏழு பேரிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பி உள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.