தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். குழந்தை பிறப்புக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் களமிறங்கிய காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தநிலையில் நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலக உள்ளார். மும்பையை சேர்ந்த இவர் கார்த்தி மற்றும் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது இவர் குழந்தையுடன் நேரம் செலவிட முடியாததால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.