தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் ஆகிய முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருக்கும் தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் டைரக்டில் ரஜினி நடிக்கும் “ஜெயிலர்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதோடு பாலிவுட்டில் தமன்னா நடித்திருக்கும் “லஸ்ட் ஸ்டோரிஸ் 2” விரைவில் வெளியாக உள்ளது.

நடிகை தமன்னா பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக அண்மை காலமாக சமூகவலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில் “லஸ்ட் ஸ்டோரிஸ் 2-ல் தான் நாங்கள் பழகினோம். இதனிடையில் விஜய் வர்மாவிடம் என்னால் இயல்பாக பேச முடிந்தது. நான் எதிர்பார்த்தது போல் இருந்த நபர் இவர் தான். நான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். அவரை நான் காதல் செய்கிறேன். விஜய் வர்மா என் மகிழ்ச்சியான இடம்” என்று அவர் கூறியுள்ளார்.