கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தார்வாட் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பெரோஸ் பதான் என்பவர், நேற்று இரவு ஹஸ்மிநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், பெரோஸ் பதானை சரமாரியாகத் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பெரோஸ் பதானின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அரசியல் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் துணிகரக் கொலை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
