கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சுஷாந்த் பூஜாரி என்பவர், திருமணமாகாத பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளைத் திருடித் தப்பிச் செல்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இதுவரை அவர் இதேபோல 9 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

தற்போது போலீஸார் அவரைச் சிறையில் அடைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.