குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் ஏர் கண்டிஷனர் ஒன்றிற்குள் மூன்று விஷப்பாம்புகள் தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து விசித்திரமான சத்தம் வருவதைக் கேட்டு சந்தேகமடைந்த உரிமையாளர், உடனடியாக என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்குத் தகவல் அளித்தார்.

மேலும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர், மிகவும் லாவகமாக ஏசியின் பாகங்களைப் பிரித்து சோதனையிட்டபோது, உள்ளே மூன்று கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். மீட்புப் பணியின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்ட தன்னார்வலர்கள், ஏசி இயந்திரத்திற்கு எந்த சேதமும் ஏற்படாமல் ஒவ்வொரு பாம்பாக லாவகமாகப் பிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.

“>

இதனால் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான இடத்தைத் தேடி பாம்புகள் இது போன்ற மின்சாதனப் பொருட்களுக்குள் புகுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மீட்கப்பட்ட அந்த மூன்று பாம்புகளும் பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன.