மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வரும் நிலையில், படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விடாமுயற்சி படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்ய, தயாரிப்பாளருக்கு அஜித் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.