ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களுள் ஒன்றாக தேர்வான பெருமையை பெற்ற திரைப்படம் ‘கூழாங்கல்’. PS வினோத்ராஜ் இயக்கிய இப்படம் பெரிய கவனம் பெற்றிருந்தாலும், படத்தை திரையரங்கில் வெளியிடாமல் கிடப்பில் போட்டார் தயாரிப்பாளர் ‘ரௌடி பிக்சர்ஸ்’ நயன்தாரா. கஷ்டத்தில் உதவிய தனக்கு அடுத்த படத்தை பண்ணாமல், SKவின் கம்பெனியை நோக்கி வினோத் சென்றதே, அவரது இந்த கோபத்திற்கு காரணமாம்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் இருக்கும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.