ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேசமயம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளன.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ Paytm முன்வந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியேற்றுள்ள அந்நிறுவனத்தின் விஜய் சேகர் சர்மா, துயரத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்து உதவிட விரும்புவோர் Paytm மூலம் அளிக்கும் நன்கொடை ஒடிசா முதல்வர் நிவாரண நிதிக்கு டெபாசிட் செய்யப்படும். அதற்கான ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.