ஐரோப்பாவில் நெஸ்லே நிறுவனத்திற்குச் சொந்தமான 12 டன் எடையுள்ள கிட்காட் சாக்லேட் பாரங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளன. இத்தாலியிலிருந்து போலந்திற்கு சுமார் 4 லட்சம் சாக்லேட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி, வழியிலேயே மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், சந்தையில் கிட்காட் சாக்லேட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதால், இந்தத் திருட்டு காரணமாகப் பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
திருடப்பட்ட இந்த சாக்லேட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு நெஸ்லே கேட்டுக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு சாக்லேட் பாக்கெட்டிலும் உள்ள ‘பேட்ச் கோட்’ எனப்படும் தொகுதி குறியீடுகளை வைத்துத் திருடப்பட்ட பொருட்களை அடையாளம் காண முடியும் என்றும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் ஐரோப்பிய நாடுகளிடையே விநியோகச் சங்கிலி பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
