தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலையில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டியை குழந்தைகளை தெருநாய்கள் விரட்டி கடிக்கும் சம்பவங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மூதாட்டி தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது தெருநாய்கள் விரட்டி விரட்டி மூதாட்டியை கடித்துள்ளது. அவர் நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக முயற்சி செய்கிறார். ஆனாலும் நாய்கள் அவரை கடித்து குதறியது.

அந்த சமயம் அதிர்ஷ்டவசமாக வந்த ஒருவர் தெரு நாய்களை விரட்டி மூதாட்டியை காப்பாற்றுகிறார். தெரு நாய்கள் கடித்ததால் மூதாட்டியின் உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெரு நாய்கள் மூதாட்டியை விரட்டி கடித்த சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.