அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகப் போனால், அங்குள்ள டாக்டரோ அல்லது நர்ஸோதான் நமக்கு ஊசி போட வேண்டும், ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டும். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், அங்கு வேலை பார்க்கும் செக்யூரிட்டி கார்டு ஒரு நோயாளிக்கு குளுக்கோஸ் ட்ரிப்ஸ் போடும் அதிரவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் சிங்கரௌலி மாவட்ட அரசு மருத்துவமனையில்தான் இந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு வந்த நோயாளி ஒருவருக்கு, மருத்துவ ஊழியர்கள் யாரும் இல்லாததால், கையில் கம்பீரமாக ட்ரிப்ஸ் பாட்டிலை ஏந்தியபடி அந்த செக்யூரிட்டி கார்டு சிகிச்சை அளித்துள்ளார். இந்த அநியாயத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கினார்.

“>

இதைப் பார்த்ததும் அந்த செக்யூரிட்டி கார்டு துளியும் பயப்படாமல், ‘வீடியோ எடுத்து நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ.. உன்னால என்ன செய்ய முடியும்?’ என கேமரா முன்னாடியே திமிராகப் பேசி சவால் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்து வருகிறது.