சமூக வலைதளங்களில் ஒரு நபர் ஆபத்தான நாகப்பாம்புடன் எந்தவித பயமும் இன்றி விளையாடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் பொதுவாகப் பாம்பைக் கண்டால் அனைவரும் பயந்து ஓடும் நிலையில், இந்த வீடியோவில் உள்ள நபர் ஒரு வயல்வெளியின் அருகே நின்று கொண்டு, அங்கிருந்து வெளியேற முயலும் பாம்பை மிகவும் சாதாரணமாக எதிர்கொள்கிறார்.
Gặp mình là bỏ chạy cho rồi, chạy mà còn sợ nó rược nữa 😅 pic.twitter.com/uT5sBeBEcL
— Tran Thai Hoa (@Tran_Thai_Hoa) June 18, 2026
“>
இதனால் அந்தப் பாம்பு வயலை விட்டு வெளியே வர முயற்சிக்கும் போதெல்லாம், அவர் தனது காலால் அதை லேசாகத் தள்ளி மீண்டும் வயலுக்குள்ளேயே திருப்பி அனுப்புகிறார். எவ்வித பதற்றமும் இன்றி அவர் செய்யும் இந்தச் செயல், பார்ப்பவர்களைக் கண் இமைக்காமல் உறைந்து போகச் செய்துள்ளது.
இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, பார்ப்பதற்கு ஏதோ ஒரு பொம்மையுடன் விளையாடுவது போன்ற தோற்றத்தை அளித்தாலும், பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்குப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிலர் இதை ஆச்சரியமாகப் பார்த்தாலும், நாகப்பாம்பு போன்ற மிகக் கொடிய விஷமுள்ள உயிரினங்களுடன் இவ்வாறு விளையாடுவது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்று எச்சரிக்கிறார்கள். இந்த மனிதனுக்கும் பாம்பிற்கும் இடையேயான விசித்திரமான மோதுதல் இணையத்தில் பல லட்சம் பார்வைகளைப் பெற்றுத் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
