எக்ஸ் (X) வலைதளத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது வீட்டின் சோபாவைச் சுத்தப்படுத்தி, நன்கு உலர வேண்டும் என்பதற்காக வீட்டின் வாசலில் வெயிலில் காய வைக்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தச் சமயம் அங்கு வந்த குப்பை சேகரிக்கும் வாகனப் பணியாளர்கள், யாரோ பழைய சோபாவை குப்பையாகத் தூக்கிப் போட்டுவிட்டார்கள் எனத் தவறாகக் கருதிவிட்டனர்.
Garbage Service Mistakenly Collects Sofa After It Was Cleaned and Left Outside to Dry pic.twitter.com/8skHMw4huU
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 24, 2026
சுற்றும் முற்றும் பார்க்காத அந்தப் பணியாளர்கள், மின்னல் வேகத்தில் அந்த சோபாவைத் தூக்கித் தங்களது குப்பை வண்டியில் போட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர். அந்தப் பெண் உள்ளே இருந்து வருவதற்குள் அவரது விலை உயர்ந்த சோபா “குப்பையோடு குப்பையாக”ப் பயணிக்கத் தொடங்கியது. எதேச்சையாக அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள், தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பலரையும் சிரிக்க வைத்து வருகிறது. “வீட்டுக்கு வெளிய எதை வச்சாலும் யோசிச்சு தான் வைக்கணும்” என்று நெட்டிசன்கள் இந்தக் காணொளிக்குக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
