பிரபல ட்ராவல் வ்லாகரான தீபக் வேதி, தான் பயணம் செய்த முதல் வகுப்பு ஏசி (First AC) பெட்டியில் இருந்த ஒரு பயங்கரமான பாதுகாப்பு குறைபாட்டைத் தனது காணொளியில் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வீடியோவில், அவர் பெட்டியின் உள் கதவைத் திறந்தவுடன், அது எவ்வித பாதுகாப்பு தடுப்பும் இன்றி நேரடியாக ரயிலுக்கு வெளியே செல்லும் வாசலுக்கு அழைத்துச் செல்கிறது. தவறுதலாக யாராவது லேசாகத் தள்ளினால் கூட, பயணி நேராக ஓடும் ரயிலில் இருந்து வெளியே விழுந்துவிடும் அபாயம் இருப்பதை அவர் விளக்கியுள்ளார்.
रेलवे जान लेकर ही छोड़ेगा?
फर्स्ट एसी के लिए महंगा किराया भी दो। फिर भी इतनी बड़ी लापरवाही होगी तो जिम्मेदार कौन? pic.twitter.com/H1BQJFKeH4
— Arvind Sharma (@sarviind) January 23, 2026
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. சிலர் இது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று ரயில்வேயைத் திட்டி வரும் வேளையில், மற்றவர்களோ “இது பழைய கோச் ஸ்டைல் தான், கதவு இரண்டு பக்கமும் திறக்கும்” என்று அந்த வ்லாகரை விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், ரயில்வே நிர்வாகம் (Railway Seva) இந்த வீடியோவுக்குப் பதிலளித்துள்ளது. அந்தப் பயணி தனது ரயில் எண் மற்றும் பயண விவரங்களைப் பகிர்ந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
