ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ரீஸ் டாப்லிக்கு பதிலாக பெங்களூரு அணியில் தென் ஆப்பிரிக்காவின் வேய்ன் பார்னெல் சேர்க்கப்பட்டுள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடியபோது பெங்களூரு அணியின் வேகப்பந்து  வீச்சாளர் ரீஸ் டாப்லி  காயமடைந்தார். அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயத்தின் பாதிப்பு அதிகம் இருந்ததால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.. இந்நிலையில் அவருக்கு பதிலாக பெங்களூர் அணியில் தென் ஆப்பிரிக்கா அணியின் வேய்ன் பார்னெல் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக பெங்களூர் அணியிலிருந்து விலகிய ரஜத் பட்டிதாருக்கு பதிலாக  வைஷாக் விஜய் குமார் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.