ஐபிஎல் போட்டிகள் அதிகம் முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி மன்தீப் சிங் மோசமான சாதனை படைத்துள்ளார்..

ஐபிஎல் தொடரின் 9வது லீக்  போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது.. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 204 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 17.4 ஓவர்களில் 123 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.. இப்போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கொல்கத்தா வீரர் மன்தீப் சிங் மோசமான சாதனை படைத்துள்ளார்..

அதாவது, ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை  பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை மன்தீப் சிங் பிடித்துள்ளார். அதன்படி மன்தீப் சிங் 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.. மேலும் ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் 14 முறையும், பியூஸ் சாவ்லா  ஹர்பஜன் சிங், பார்த்தீவ் படேல், ரஹானே, அம்பாத்தி ராயுடு ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்..