சமூக வலைதளங்களில் ஒரு திகிலூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் மிகவும் உயரமான பாலத்தின் நடுவில் உள்ள குறுகிய இடத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து, எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் ஆபத்தான சாகசம் செய்கிறார். அவர் நாற்காலியில் அமர்ந்து கழுத்து மற்றும் கைகளுக்கு மசாஜ் செய்துகொள்கிறார். ஒரு சிறிய தவறு நேர்ந்தாலும், அவர் கீழே விழுந்து உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில், அவர் சற்றும் பயப்படாமல் ஓய்வெடுக்கிறார்.

​இந்தப் பயங்கரமான வீடியோவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெட்டிசன்கள், “இந்த உயரத்தில் நிற்க நினைத்தாலே தலை சுற்றுகிறது”, “இவரைப் போல யாரும் இப்படி ஆபத்தான ஸ்டன்ட்களைச் செய்யக் கூடாது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘லைக்ஸ்’ பெறுவதற்காக சிலர் எப்படி உயிரைப் பணயம் வைக்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணமாக உள்ளது.