தமிழக வெற்றி கழக த்தின் பொதுக்குழு கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு நடிகர் விஜய் வருகை புரிந்துள்ள நிலையில் கூட்டம் தொடங்கிவிட்டது. இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்திற்கு வந்த விஜய் கார் வழியாக சாலை மார்க்கமாக ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவரை ஏர்போர்ட்டில் இருந்து ரசிகர்கள் பின்னால் தொடர்ந்து வந்தனர்.
விஜய் காருக்கு இணையாக ஆபத்தான முறையில் பைக்கில் துரத்தி வரும் TVK வாரியர்ஸ்…!#Vijay #VijayEntry #Erode #VijayErodeVisit #Vijayamangalam #SaralaiErode #TVK #TVKCampaign #VijayMakkalSanthippu #TVKCandidate #ThalapathyVijay #NewsTamil24x7 pic.twitter.com/jvur6ChvhW
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) December 18, 2025
குறிப்பாக கரூர் செல்லும் வழியில் செல்பி எடுப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் நடிகர் விஜய்யின் காரை சூழ்ந்து கொண்டனர். இதன் காரணமாக அவர்தான் காரை நிறுத்தினார். மேலும் ரசிகர்கள் நடிகர் விஜயின் காரை பின் தொடரக்கூடாது என ஏற்கனவே தமிழக வெற்றிக்கழகம் அறிவுறுத்தி இருந்த நிலையில் ரசிகர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவரை பின்தொடர்ந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாங்களே..! கரூர் செல்லும் வழியில் விஜயின் வாகனத்தை சூழ்ந்துக்கொண்டு செல்பி எடுக்கும் தொண்டர்களால் வாகனத்தை நிறுத்திய விஜய்..#Erode | #Vijayamangalam | #TVK | #TVKVijay | #TVKLeaderVijay | #VijayMakkalSanthippu | #polimernews pic.twitter.com/0pT8A5hGPD
— Polimer News (@polimernews) December 18, 2025
