ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வரலாற்றுச் சாதனையுடன் கோப்பையைக் கைப்பற்றி மாஸ் காட்டியுள்ள நிலையில், இந்த சீசன் முழுவதும் தனது பயமற்ற, அதிரடியான அட்டாக்கிங் பேட்டிங் ஸ்டைலால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைக் கிண்டலாகப் பாராட்டி, இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது இப்போ செம ட்ரெண்டாகி வருகிறது!
வைபவ்வை செல்லமாக வறுத்தெடுக்கும் தொனியில் அஸ்வின், “தம்பி வைபவ்.. நீ உன்னோட அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுக்காக ‘சூப்பர் ஸ்டிரைக்கர்’ மற்றும் ‘சூப்பர் சிக்ஸர்ஸ்’ விருதுகளை எல்லாம் அசத்தலாக தட்டித் தூக்கிட்டாய், ஆனா அந்த ‘சூப்பர் ஃபோர்ஸ்’ (அதிக ஃபோர் அடித்ததற்கான) அவார்டு மட்டும் உன்னை விட்டு நழுவிப் போயிடுச்சு; அதுல எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்!
இனிமேல் பந்துகளை எப்போதும் வானத்துக்கே ஏவி விட்டு காற்றில் மட்டும் பறக்கவிடாமல், கொஞ்சம் மைதானத்துல தரையோடு தரையாக ஃபோர் அடிப்பதிலும் உன்னோட நேரத்தைச் செலவிடப் பாருப்பா” என்று பாசத்தோடு அட்வைஸ் செய்துள்ளார்.
R. Ashwin to Vaibhav Suryavanshi:
“You won the Super Striker and Super Sixes awards, but your Super Fours award slipped away. I’m a little disappointed! Try spending some time on the ground too, not just in the air.” 😄♥️ pic.twitter.com/vnQqDhbOpV
— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) June 1, 2026
“>
