ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று மாஸ் காட்டியுள்ள போதிலும், அந்தப் போட்டி நடந்த இடம் குறித்து கர்நாடகாவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள டி.கே.சிவகுமார் வெளியிட்டுள்ள  அறிக்கை இப்போ பரபரப்பாக  மாறியுள்ளது!

“ஐபிஎல் ஃபைனல் மேட்ச் பெங்களூருவில்தான் நடந்திருக்க வேண்டும், ஆனால் அது அகமதாபாத்தில் நடத்தப்பட்டுள்ளது. இது ஆர்சிபி அணிக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று சொல்வதைக் காட்டிலும், ஒட்டுமொத்த கர்நாடக இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று சொல்வதே மிகச் சரியாக இருக்கும்” என அவர் ஆவேசமாகத் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த முறை ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர கூட்டநெரிசல் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “அன்று என்ன நடந்திருந்தாலும், கர்நாடக மக்கள் அதையெல்லாம் முற்றிலும் மறந்துவிட்டு இப்போது ஒரு புதிய தொடக்கத்திற்கு முழுமையாகத் தயாராகியிருக்கிறோம்” என்று உணர்ச்சிப் பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

ஆர்சிபி கோப்பையைத் தூக்கிய பின்னரும், அகமதாபாத்தில் ஃபைனல் நடந்ததற்குப் பின்னால் இருக்கும் அரசியல் குறித்து டி.கே.சிவகுமார் கூறியது விவாதங்களை உருவாக்கியுள்ளது!