உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரேஸ் பகுதியில் விவசாயியான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வங்கி கணக்கில் 36 இலக்கத்தில் பணத்தின் இருப்பு காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவருடைய வங்கி கணக்கில் ரூ..1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்ற தொகை இருந்துள்ளது.பின்னர் இது தொடர்பாக விசாரித்த போது அது கணினி மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக அப்படி காண்பித்தது தெரிய வந்தது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு $389 பில்லியன் தான். அதாவது இவருடைய சொத்து மதிப்பு தமிழில் 14 இலக்கம்தான். மேலும் இவரை விட அந்த விவசாயின் வங்கி கணக்கில் அதிகமாக பணம் காட்டப்பட்டது ஆச்சிரியமான ஒன்றாக பேசப்படுகிறது.
