தாய்லாந்து தலைநகர் பேங்காக் அருகே சாமுத் பிராகன் மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில், லாரியின் பின்பகுதி எதிர்பாராதவிதமாக உயர்த்தி வைக்கப்பட்ட நிலையில் அதிவேகமாகச் சென்றது.
சாலையின் குறுக்கே இருந்த நடைபாதை மேம்பாலத்தை லாரியின் முன்பகுதி கடந்த போதிலும், செங்குத்தாக நின்ற அதன் பின்பகுதி பாலத்தின் மீது மிகப்பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் அந்த கான்கிரீட் மேம்பாலம் அப்படியே சரிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் மற்றும் அருகில் சென்ற ஒரு வாகனம் சேதமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
<a href=”http://
🚨⚡️UNUSUAL
In Thailand, a truck that was driving with its truck bed raised collided with a pedestrian bridge, causing it to collapse onto other cars below it. pic.twitter.com/RgtNPN4XGw
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) December 18, 2025
“>
ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது இயந்திரக் கோளாறா என்பது குறித்து அந்நாட்டுப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பதைபதைக்க வைக்கும் இந்த விபத்து காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
