பள்ளிக் குழந்தைகளின் மழலை மாறாச் செயல்களும், வகுப்பறையில் அவர்கள் செய்யும் குறும்புத்தனங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது பள்ளி ஒன்றில் காலைப் பிரார்த்தனையின் போது சிறுவன் ஒருவன் ஆடிய பரவச நடனம் இணையவாசிகளின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், சக மாணவர்கள் கண்கள் மூடி கைகூப்பி அமைதியாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, வரிசையில் முன்னால் நிற்கும் ஒரு சிறுவன் மட்டும் பிரார்த்தனைப் பாடலின் லயத்தில் தன்னை மறந்து மெய்மறந்து நடனமாடுகிறான். உலகமே அறியாத அந்த மழலையின் கள்ளமற்ற பக்தியும், குதூகலமும் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
<a href=”http://
View this post on Instagram
“>
சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், ஒரு மில்லியனுக்கும் மேலான விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு, “இன்று டிபனுக்கு மேகி கொண்டு வந்திருப்பான் போல”, “பிரார்த்தனையை இவன் தான் உண்மையாக ரசிக்கிறான்” எனப் பயனர்கள் பலரும் சுவாரசியமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
