பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்டது.

2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி, எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் எப்ஸ்டீன் உடன் அமர்ந்து இரவு உணவு அருந்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பை எப்ஸ்டீன் தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் “வைல்ட்” (Wild) என்று வர்ணித்துள்ளார்.

எலான் மஸ்க் தனக்கும் எப்ஸ்டீனுக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறி வந்த நிலையில், 2012-ல் அவர் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய ஈமெயில் சிக்கியுள்ளது. அதில், “எங்காவது பார்ட்டி நடக்கிறதா? நான் ஜாலியாக இருக்க வேண்டும்” என்று மஸ்க் எப்ஸ்டீனிடம் கெஞ்சியது தெரியவந்துள்ளது.

ஜுக்கர்பெர்க் தரப்போ, “நாங்கள் எப்ஸ்டீனை ஒரு பொதுவான விருந்தில்தான் பார்த்தோம், அவரோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று மழுப்பி வருகின்றனர்.