மாரி செல்வராஜ் டைரக்டில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று மாமன்னன் படம் ரிலீஸ் ஆகியது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு உட்பட பலப் பிரபலங்கள் நடித்து உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது, எங்கள் வீட்டில் அனைவரும் காதல் திருமணம் தான் செய்து உள்ளனர். என்னுடைய பையன் நான் செய்தது விட அதிக லூட்டிலாம் செய்து கொண்டிருக்கிறான். நான் என் பையனிடம் வயசுக்கு ஏத்த மாதிரி பண்ணுன்னு சொன்னேன் என உதயநிதி பேட்டியில் கூறியுள்ளார்.