உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரசிகர்களிடமிருந்து  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘மாமன்னன்’ படம் தனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதால் இனி படங்களில் நடிக்க போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் உதயநிதி.

இதுகுறித்து பேசிய அவர், ‘நான் சொன்னதுபோல் இதுவே எனது கடைசி படம். இதற்குமேல் நான் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை’ என கூறினார். இருப்பினும் அவர் தனது கருத்தை பரிசீலனை செய்ய வேண்டும். சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.