ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளில் இருக்கும் நடிகர், இயக்குனர்கள், நடிகைகள் உட்பட பல கலைஞர்களை ஒவ்வொரு வருடமும் அழைக்கிறார்கள். தமிழ் திரையுலகில் இருந்து கடந்த வருடம் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா போன்றோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

இந்த நிலையில் 2023-ம் வருடம் ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் பிரபல இயக்குனர் மணிரத்னம் உறுப்பினர்களாக தேர்வாகி இருக்கிறார். அதோடு கீரவாணி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், கே.கே.செந்தில்குமார் மற்றும் கரண் ஜோகர் போன்றோரும் ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.