தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளவர்தான் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இதனிடையே கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு அரசியலிலும் பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பணியாற்றி வருகின்றார். இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ நேற்று முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிக்கு சென்றுள்ளார். எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.