தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். திரைப்படத்தில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ திரைப்படத்தில் இடம்பெற்ற நா ரெடி பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. காரில் சென்று கொண்டிருந்தபோது நா ரெடி பாடலுக்கு vibe ஆகி டான்ஸ் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.