உதயநிதியின் கடைசி படமாக “மாமன்னன்” நேற்று ரிலீஸ் ஆனது. மாரி செல்வராஜ் டைரக்டு செய்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், லால் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில் மாமன்னன் படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.10 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இது இந்த படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் என சொல்லப்படுகிறது.