உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மனிதநேயமற்ற முறையில் ஒரு ஒப்பந்ததாரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர், தனது தந்தையின் சமாதி அருகே ஒரு கும்பல் சிறுநீர் கழிப்பதைக் கண்டு அதைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவரை கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவரது வாயில் இரும்பு கம்பியை திணித்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ளது.

இந்நிலையில் புனிதமான இடத்தைத் தற்காத்த ஒருவருக்கு நேர்ந்த இந்த அவலநிலை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் ஒரு தனிமனிதனின் உணர்வுகளையும், இறந்தவர்களுக்கான மரியாதையையும் துளியும் மதிக்காமல் அரங்கேற்றப்பட்ட இந்த மிருகத்தனமான செயல், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.