பிப்ரவரி 20ஆம் தேதி இந்தியா- வங்காளதேசம் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணியினர் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோகித் சர்மா கடந்த நியூசிலாந்து- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் படுமோசமாக சொதப்பிய நிலையில் அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 119 ரன்களை எடுத்து அசத்தினார்.
இந்நிலையில் இந்த தீவிர வலை பயிற்சியின் போது ரோஹித் சர்மா, ஐக்கிய அரபு அமீரக செயல பவுலர் ஆவைஸ் அகமது பந்து வீசினார். அப்போது ஆவைஸ் அகமது தொடர்ந்து இன் ஸ்விங் பந்துகளை வீசியநிலையில் ரோகித் தடுமாறிக் கொண்டே இருந்தார். பயிற்சி முடிந்த பிறகு ஆவைஸ் அகமதுவை அழைத்து பேசிய ரோஹித் சர்மா, “உன்னுடைய பந்துகள் சிறப்பாக இருந்தது எனக்கு. என்னுடைய கால்களை உடைக்க தொடர்ந்து முயற்சி செய்தாய். இந்த பயிற்சி நிச்சயம் எனக்கு நல்ல பலனை கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
