தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தைச் சீர்குலைக்கச் சதி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று (பிப். 13) அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “டெல்லியில் உள்ள ஒரு கூட்டமும் (மத்திய அரசு/பாஜக), தமிழகத்தில் உள்ள இன்னொரு கூட்டமும் (எதிர்க்கட்சிகள்) இணைந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி இந்தத் திட்டத்தை முடக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தை 3 மாதங்கள் நிறுத்தி வைத்தால் என் சகோதரிகள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாவீர்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தச் சூழ்ச்சியை முறியடிக்கவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை என மொத்தம் ₹5,000-த்தை இன்று உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளோம். யார் தடுத்தாலும், என்ன தடை வந்தாலும் இந்த ஸ்டாலின் உங்களுக்காக நிற்பான்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.