தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் முன்னதாக பெரம்பூரில் மேற்கு மனு தாக்கல் செய்தார். பின்னர் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்த நிலையில் இன்று திருச்சி கிழக்கில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

இதற்காக அவர் திருச்சிக்கு வந்துள்ள நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து தொண்டர்களும் ரசிகர்களும் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நடிகர் விஜய் தன்னுடைய காரில் சென்ற போது சாலையில் சென்ற ஒருவர் அதனை விமர்சித்தார். இதனால் ஸ்கூட்டி யில் சென்ற ஒரு பெண் ஆத்திரமடைந்து அவரை பின்தொடர்ந்து விரட்டி தேவையில்லாமல் பேசாதீர்கள் என கூறியதோடு அவரை மோசமாக திட்டினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது