தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பரப்புரை பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் இந்தப் பாடலின் ஒரு பகுதியை நேரிடையாகப் பாடியிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மெகா கூட்டணியுடன் களம் காணும் நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும், விஜய் தலைமையிலான தவெகவும் தனித்துப் போட்டியிடுகின்றன.
தவெக சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் மனு தாக்கல் செய்யவுள்ளார். மேலும் இந்த நிலையில் நடிகர் விஜய் அவரது கட்சியின் பிரச்சார பாடலை வெளியிட்டு அதில் ஒரு பகுதியை அவரே பாடியுள்ளது தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது
View this post on Instagram
