தமிழகத்தில் விரைவில் கூடவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அவர்கள் வெளியிடவுள்ளதாக தற்பொழுது மிக முக்கியமான தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக, வரும் ஜூன் 22-ம் தேதி முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்றைய தினம் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என்ற புதிய பெயரில் இந்த பிரம்மாண்ட தொகையை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகளிர் உரிமைத் தொகை ₹2,500 ஆக உயரும் என்ற இந்த மாஸ் தகவல் தமிழகப் பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு ஒருபக்கம் இருக்க, வழக்கம்போல மாதந்தோறும் வழங்கப்படும் ₹1,000 உரிமைத் தொகையானது, நாளைக்கே பெண்களின் வங்கிக் கணக்கில் சரியாக வரவு வைக்கப்படவுள்ளது என்ற குட் நியூஸும் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வரப்போகும் இந்த அதிரடி ஆக்ஷன் தற்பொழுது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
