அமெரிக்காவின் தற்காப்புத் துறை அமைச்சரான பீட் ஹெக்செத், குவாண்டானமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குச் சென்றபோது அங்குள்ள வீரர்களுடன் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் பளு தூக்க முடியாமல் சிரமப்படுவதைக் கண்டு நெட்டிசன்கள் அவரை சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

அவரைச் சுற்றியிருந்த ராணுவ வீரர்கள் மிகச் சிறப்பாக உடற்பயிற்சி செய்ய, பீட் ஹெக்செத் தடுமாறிக் கொண்டிருந்ததை ஒப்பிட்டுப் பலரும் அவரை கிண்டல் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அதே நேரத்தில், தனது பயணத்தின்போது கியூபா அரசாங்கத்திற்கு பீட் ஹெக்செத் கடும் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவைத் தாக்கும் வகையில் கியூபா ஏதேனும் ஆயுதங்களை வாங்கினால், அது தேவையற்ற மோதலை உருவாக்கும் என்றும், அமெரிக்காவின் ராணுவ வலிமையை எந்த நாடும் எதிர்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“>

 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் பணியாற்றிய அவர், தற்போது அமைச்சராக மீண்டும் அங்கு சென்று வீரர்களுடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், அவரது உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் பேசுபொருளாக மாறியிருந்தாலும், கியூபாவுடனான பதற்றம் குறித்தும் அவர் ஆற்றிய உரை முக்கியமாகக் கருதப்படுகிறது.