“நாங்க சொல்ற பேச்சுப் படிதான் உங்க கப்பல்கள் நடக்கணும்.. ஈரானுக்கு சப்போர்ட் பண்ணா சும்மா விடமாட்டோம்!” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் போனில் மிகக் கடுமையான தொனியில் கறாராகப் பேசியிருப்பது உலக அரங்கில் மாபெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா – ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அரபிக்கடலில் ஹர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற 3 இந்திய வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதலில் 3 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு இந்தியத் தரப்பில் அமைச்சர் ஜெய்சங்கர் தனது பலத்த கண்டனத்தைத் தொலைபேசி வாயிலாக அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளார். ஆனால், அதற்குச் சற்றும் வளைந்து கொடுக்காத அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஹர்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் அமெரிக்க ராணுவத்தின் உத்தரவுகளுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும்; அதை விடுத்து ஈரானின் துறைமுக முடக்கத்தை மீறி சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் கொண்டு செல்வதை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது” என்று மிரட்டும் தொனியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வல்லரசு அமெரிக்காவின் இந்த அதிரடி உத்தரவும், இந்தியக் கப்பல்கள் மீதான தாக்குதலும் இந்தியா – அமெரிக்கா இடையேயான நீண்டகால நட்புறவில் மிகப்பெரிய பிளவையும், சர்வதேச கடல் வணிகத்தில் பெரும் முடக்கத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
