ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில், தற்போது ஒரு விசித்திரமான காரணத்திற்காகச் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

களத்தில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு மிரட்டலான சதத்தையும் விளாசியிருந்தாலும், அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஸ்மித் சற்றுப் பருமனான தோற்றத்துடன், துருத்திக் கொண்டிருக்கும் தொப்பையுடன் காணப்படுகிறார். இதை கவனித்த நெட்டிசன்கள், “ஸ்மித் PSL-க்கு விளையாடப் போகவில்லை, பாகிஸ்தான் பிரியாணியைச் சாப்பிடத்தான் போயிருக்கிறார்” என்றும், அவரை ‘பாகிஸ்தானின் சோட்டா பீம்’ என்றும் வாரிச் சுருட்டி வருகின்றனர்.

“>

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதும் கட்டுக்கோப்பான உடல்நலத்துடன் காணப்படும் ஸ்மித், பாகிஸ்தானிய உணவுகளுக்கு அடிமையாகிவிட்டாரா அல்லது பிட்னஸில் கோட்டை விட்டுவிட்டாரா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே சமயம், அவரது ஆளுமையில் ஏற்பட்டிருக்கும் இந்த “குண்டான” மாற்றம் கேலி செய்யப்பட்டாலும், பேட்டிங்கில் அவர் காட்டும் அதே பழைய வேகம் மற்றும் நேர்த்தி மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சதமடித்து மாஸ் காட்டினாலும், இந்த ‘தொப்பை’ வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் காட்டுத்தீயாய் பரவி, ஸ்மித்தின் இமேஜை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.