ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 9 டாட் பந்துகளுக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்றுக் கொண்டு ஆர்ச்சர் பெவிலியன் திரும்பிய போது, அங்கிருந்த ஒரு குட்டி ரசிகை “அந்த அவார்டை நான் எடுத்துக்கட்டுமா?” எனக் கேட்க, ஆர்ச்சர் கொஞ்சமும் யோசிக்காமல் சிரித்துக் கொண்டே அந்த விருதை அவரிடம் தூக்கி வீசினார்.

“>

மைதானத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அங்கிருந்த ரசிகர்களை நெகிழ வைத்ததோடு, சமூக வலைதளங்களிலும் ஆர்ச்சருக்கு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.  போட்டியில் ஆர்ச்சரின் இந்த மனிதநேயச் செயல் ரசிகர்களின் இதயங்களை “க்ளீன் போல்ட்” செய்துவிட்டது.