தேர்தல் ஆணையம் தங்களுக்கு ஒதுக்கிய மைக் சின்னம் வேறு வடிவத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். ON, OFF ஸ்விட்ச் இல்லாமல் இருக்கும் மைக் சின்னத்தை ஒதுக்கிவிட்டு சுவிட்ச் உடன் இருக்கும் மைக் சின்னம் ஒட்டப்படுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்திருந்த நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.