தமிழகம் முழுவதும் சமீபகாலமாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், நாமக்கல் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் அவ்வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.