தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி, “ஆட்சியில் பங்கு” என அதிரடியாக அறிவித்த பிறகும், இதுவரை ஒரு கட்சி கூட விஜய்யுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை என்பது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பெரிய கட்சிகள் எதுவும் வராததால், கட்சியின் ஒரு தரப்பு நிர்வாகிகள் கடும் அப்செட்டில் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, மற்ற கட்சிகளிலிருந்து தவெக-வுக்கு வந்த சில முக்கிய நிர்வாகிகள், “இங்கே வேலைக்காகாது” என்று நினைத்து மீண்டும் தங்கள் பழைய கட்சிக்கே (தாய் கழகம்) திரும்பலாமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார்களாம்.
இன்னொரு பக்கம், விஜய்யுடன் கண்டிப்பாகக் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன், இப்போது மீண்டும் என்டிஏ (NDA) கூட்டணியிலேயே இணைய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய் ரசிகர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலமான கூட்டணி அமையாதது ஒருபுறம், வந்தவர்களும் கிளம்பத் துடிப்பது மறுபுறம் என தவெக கட்சிக்குள் இப்போது ஒரு இக்கட்டான சூழல் நிலவி வருகிறது.
