அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என அறிவித்துள்ளார். இபிஎஸ்-ஸின் இந்த அறிவிப்பைத் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த காலங்களில் இதே போன்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி எதிர்த்ததைச் சுட்டிக்காட்டி அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து மனோ தங்கராஜ் கூறுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, இது ஒரு ஏமாற்று வித்தை என்றும், மாநில நிதி நிலைமைக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்தவே முடியாது என்றும் கூறினார்” எனத் தெரிவித்தார்.
அன்று நிதி இல்லை என்று கூறியவர், இன்று 2,000 ரூபாய் தருவதாகக் கூறுவது முரணாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
