தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் திரிஷா ஜோடி சேர்ந்து உள்ள நிலையில் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் ரிலீசாகும் படங்களை அதிகாலையில் திரையிட அனுமதி இல்லாத சூழலில் ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 18ஆம் தேதி சிறப்பு காட்சியை திரையிட லியோ பட குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவ்வாறு நடந்தால் தங்களது வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.