எனது திருமணம் எப்போது நடைபெறும் என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் என நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. முகமூடி, பீஸ்ட் , ராதே ஷியாம், அல வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடனமாடிய ‘புட்டபொம்மா’ பாடல் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. இவர் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் செர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில்.

சென்னையில் தனியார் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டபின் பேசிய அவர், திருமணத்தைப் பற்றி தற்போது யோசிக்கவே இல்லை. எனது திருமணம் தனித்துவமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். நான் தற்போது நல்ல படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அது மட்டுமே இப்போதைக்கு எனக்கு தெரிந்த ஒரே விஷயம் என கூறினார்.