பாலிவுட் நடிகர் சல்மான் கான், சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர். சில நாட்களுக்கு முன்பு தனது தனிமை குறித்து அவர் பதிவிட்ட பதிவு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள மிகவும் கோபமான பதிவு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இதுபோன்ற 100 பேரை நான் கொளுத்தி சாம்பலாக்கிவிடுவேன்” என்று அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சல்மான் கான் யாருக்கு எதிராக, ஏன் இந்த அளவுக்கு கொதித்தெழுந்துள்ளார் என்பது பற்றி பார்ப்போம்.
சல்மான் கான் தனது பதிவில் ஊடகங்கள் மற்றும் பாப்பராஸிகள் (Paparazzi – புகைப்படக் கலைஞர்கள்) குறித்துக் குறிப்பிட்டுள்ளார். தான் எப்போதும் ஊடகங்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளதாகவும், புகைப்படக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், ஒருவருடைய கடினமான அல்லது சோகமான சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அதன் மூலம் இன்பம் காணத் துடிப்பவர்கள் மீது தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
இதுகுறித்து சல்மான் கான் தனது பதிவில் கூறியிருப்பதாவது, நான் எப்போதும் பத்திரிகையாளர்களின் பின்னால் நின்றிருக்கிறேன், அவர்களுடன் பழகியிருக்கிறேன், அவர்களின் நலனில் அக்கறை காட்டியிருக்கிறேன். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்திருக்கிறேன். ஆனால், என்னுடைய துயரத்தையும் சோகத்தையும் வைத்து அவர்கள் பணம் சம்பாதிக்க நினைத்தால்… வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள், அதை கொண்டாடுவதை நிறுத்துங்கள்.
மேலும், தனது வரவிருக்கும் திரைப்படமான ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ (Matrubhoomi: என்பதைக் குறிப்பிட்டு, “மனித உயிரை விட ஒரு புகைப்படம் அவ்வளவு முக்கியமானதா?படத்தின் கதையை விடுங்கள், இங்கே உயிரை விட போட்டோதான் முக்கியமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சல்மான் கான் தனது பதிவின் தொடர்ச்சியாக, இதுபோன்ற 100 பேரை நான் கொளுத்தி சாம்பலாக்குவேன். அடுத்த முறை எனது சகோதரர்களில் யாராவது சோகத்தில் இருக்கும்போது, என்னுடன் நிற்க முயற்சி செய்யுங்கள். ஒரே ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தில் யாராவது மருத்துவமனையில் இருக்கும்போது, நான் இப்படித்தான் நடந்துகொள்வேனா? எனக்கு இப்போது 60 வயதாகிறது, ஆனால் நான் இன்னும் சண்டை போட மறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேண்டுமானால் என்னை நீங்கள் சிறையில் தள்ளுங்கள் என்று மிகவும் ஆக்ரோஷமாக எழுதியுள்ளார்.
கடந்த மே 19-ஆம் தேதி இரவு, சல்மான் கான் மும்பையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது கார் போக்குவரத்து சிக்னலில் நின்றபோது, புகைப்படக் கலைஞர்கள் அவரைப் பார்த்துவிட்டு, மருத்துவமனை வரை அவரது காரைத் துரத்திச் சென்றுள்ளனர். சல்மான் கான் காரை விட்டு வெளியே வந்ததும், அங்கிருந்த சில புகைப்படக் கலைஞர்கள் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக ‘பாய்.. பாய்..’ என்று சத்தமாக அலறியுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே இப்படி அநாகரிகமாக சத்தம் போட்டதைக் கண்டு சல்மான் கான் கடும் கோபமடைந்தார். உடனடியாக அவர்களிடம் சென்று, இது மருத்துவமனை பகுதி என்பதால் அமைதியாக இருக்கும்படி எச்சரித்தார். மேலும் உங்கள் குடும்பத்தில் யாராவது இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இப்படித்தான் கத்தி ஆரவாரம் செய்வீர்களா?” என்று மிகக் கடுமையான குரலில் கண்டித்தார்.
மருத்துவமனைக்கு வெளியே நேரில் கண்டித்ததைத் தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களிலும் அவர்களுக்கு எதிராக இந்த அதிரடியான எச்சரிக்கைப் பதிவை சல்மான் கான் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
