தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா வந்திருந்த அமெரிக்கர் ஒருவர், குரங்குகளால் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு அதிர்ச்சி அடைந்த சம்பவம், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டரில் பயணித்த அந்த அமெரிக்கர், முன்பாக வைத்திருந்த பையில் சாக்லேட் கேக் மற்றும் ஆரஞ்சுகளை வைத்திருந்தார். இவர் சில நிமிடங்கள் நின்றபோது, அருகில் இருந்த குரங்குகள் குழுமமாக வந்து பையைத் திறந்து உணவுகளை பறித்துச் சென்றன.

அந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “I got robbed in India by monkeys!” என்று குறிப்பிடப்பட்ட இந்த வீடியோ, அமெரிக்க பயணியின் @vanboys222 இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Free Spirit Traveler⭐️ (@vanboys222)

“>

“என் கண் முன்னே என் உணவை எல்லாம் எடுத்துச்செஞ்சாங்க, என்னால எதுவும் செய்ய முடியல… இப்போ எனக்குப் பசிக்குது!” என அவர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக நெட்டிசன்கள் பலர் நகைச்சுவையாகவும், சிந்தனையுடனும் கருத்து தெரிவித்துள்ளனர். “கடவுளின் சிறிய உயிரினங்களும் சாப்பிடணும்” என ஒருவர் பதிவு செய்திருக்க, “இது பற்றி புகார் கொடுங்க” என மற்றொருவர் நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்தியாவின் பல சுற்றுலா பகுதிகளில் குரங்குகள் உணவுப் பொருட்களை பறிக்கின்ற சம்பவங்கள் பொதுவாகவே நடைபெறுவதால், சுற்றுலா பயணிகள் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சுற்றுலா தகவல் மையங்கள் வலியுறுத்துகின்றன.